RSS

மாஸ்டர் இந்தி ரீமேக்... வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான இப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த ஆண்டில் திரையரங்கில் வெளியாகி அதிக வசூல் குவித்த படமும் மாஸ்டர் தான். மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி (வாத்தி) கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Hi friends like page Tamil cinema news daily

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS