RSS

மாஸ்டர் இந்தி ரீமேக்... வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான இப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த ஆண்டில் திரையரங்கில் வெளியாகி அதிக வசூல் குவித்த படமும் மாஸ்டர் தான். மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி (வாத்தி) கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Hi friends like page Tamil cinema news daily

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர்

 


நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார்.


விஜய்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார்.


நடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இயக்குனர் வம்சி பைடி பல்லி சமீபத்திய பேட்டியில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.


இயக்குனர் வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பட்டுக்கோட்டை: சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்


கொரோனா பரவலையொட்டி சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பட்டுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.


கொரோனாவின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தாலும் நகரங்களுக்கு இணையாக தொடர்ந்து கிராமங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பட்டுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சாலைகளில் கிருமி நாசினி இயந்திரத்தின் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

ஏற்கனவே,  விஜய் மக்கள் இயக்கத்தினர் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், முட்டைகள் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி உதவி செய்தனர். குரங்குகளுக்கு பழங்கள் தண்ணீர் தொட்டி அமைத்தனர். இந்நிலையில், தற்போது கிருமி நாசினியும்  தெளித்து வருவதால் அவர்களது இந்தப் பணிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தளபதி 65வது படத்தின் கதை இதுதானா, விஜய்க்கு இப்படி ரோலா?- கசிந்த தகவல்






மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்தில் எப்போதோ கமிட்டாகி விட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக நடிகை பூஜா ஹெட்ச் தான் நாயகி என தகவல்கள் வருகின்றன, ஆனால் உறுதியாகவில்லை.

இப்போது படத்தை பற்றியும் விஜய்யின் வேடம் குறித்தும் ஒரு தகவல்.

இப்படத்தில் விஜய்க்கு இன்டர்நேஷ்னல் ஏஜெண்ட் போன்ற வேடமாம், ஜேம்ஸ் பான்ட் போன்று கூட சொல்லலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எப்படி செல்லப்பிராணி வளர்ப்பது மற்றும் பராமரிப்பது?







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு விஷயம் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்.



அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2010 முதல் 2019 வரை அந்தந்த ஆண்டுகளில் அதிகம் வாசொல் செய்த படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. 2019 = பிகில் - { 300 கோடி }

2. 2018 = 2.0 - { 650 - 800 கோடி }

3. 2017 = மெர்சல் - { 260 கோடி }

4. 2016 = கபாலி - { 289 கோடி }

5. 2015 = ஐ - { 240 கோடி }

6. 2014 = லிங்கா - { 158 கோடி }

7. 2013 = சிங்கம் 2 - { 122 கோடி }

8. 2012 = துப்பாக்கி - { 126 கோடி }

9. 2011 = 7ஆம் அறிவு - { 107 கோடி }

10. 2010 = எந்திரன் - { 290 கோடி }

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடந்த வாரம் டிவி-யில் அதிகம் பேர் பார்த்த படங்கள் இவை தான், முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யும் போது TRP என்ற விஷயம் பலராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும்.



அந்த வகையில் கடந்த வாரம் ஒளிப்பரப்பு ஆகிய படங்களில் அதிகம் பேர் பார்த்த படங்கள் இவை தான், இதோ...

9th May To 15th May Tamil Movies Television Impressions

Kanchana - 9869000

Dharma Prabhu - 7972000

ATM - 5657000

Devarattam - 5134000


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS